internet

img

ஆன்லைன் ஷாப்பிங் வசதி அறிமுகம் செய்யும் பேஸ்புக்!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வகையில் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே வணிகர்கள் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பேஸ்புக் அப்டேட் செய்திருந்தது. தற்போது, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் வாங்கும் வகையில் வசதி ஒன்றை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் அதிக அளவிலான வணிகர்களை உலகளாவிய வர்த்தகத்தில் ஒன்றிணைக்க முடியும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த புதிய வசதி இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.